காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காவிரி ஒழுங்கற்று  ஆணையம்  3000 கன அடி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி உள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையத்திடம் வைத்துள்ளார்கள். ஆனால் கோரிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையோ, அல்லது அந்த உத்தரவைவும்  ஆணையம் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில் தான் காவேரி ஒழுங்காற்று குழுவின் கூட்டமானது  12ஆம் தேதி நடக்கின்றது. காவேரி ஒழுங்காற்று குழுவின்  88ஆவது கூட்டத்திற்கு குழு தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். இந்த  கூட்டத்திலும் கர்நாடக அரசு காவிரி ஆணையம் அளித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும். அதே போல   அதற்கான காரணங்களையும் முன்வைப்பார்கள்.

தங்கள் மாநிலத்தில் மழை பெய்யாத காரணமாக நீர்நிலைகள் எந்த அளவு நீர் இருப்பு இருக்கின்றது. அந்த நீரை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?   குடிநீர் பயன்பாட்டுக்காக மட்டுமே தங்களிடம் நீர் கையறுப்பு இருக்கிறது ?  போன்ற விஷயங்களை எல்லாம் தெரிவித்து இருந்தார்கள். அதேபோல தமிழகத்திற்கு ஆணையம் உத்தரவின்படி குறிப்பிட்ட அளவிலான நீர்  வழங்க இயலாது என இந்த கூட்டத்தில் மீண்டும் அவர்கள் தரப்பில் முன் வைக்கப்படும்.

கடந்த 29ஆம் தேதி நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கூட இதுபோன்ற வாதத்தை முன் வைத்திருந்தார்கள். கட்டாயமாக தமிழகத்திற்கு தங்களால் தண்ணீரை திறந்து விட முடியாது என்ற வார்த்தை முன் வைத்திருந்தார்கள். இதற்கு கடுமையாக தமிழ்நாடு அரசு சார்பாக கலந்து கொண்ட அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள். இதன் காரணமாக இருதரப்புக்கும் கடுமையான ஒரு வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில் தான் தற்போது கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.