1998ஆம் ஆண்டு கோவை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா  அமைப்பை சேர்ந்த பாட்ஷா உட்பட 12 நபர்களுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.  இவர்கள் 25 வருடங்களாக சிறையில் இருப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு பிணையளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் உச்சநீதிமன்றத்திலே இன்று கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள் நடந்த குற்றம் என்ன என்பதை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டனர் ?  அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரான கிரி, இந்த குண்டு வெடிப்புகளிலேயே 58 பேர் மரணம் அடைந்தார்கள் என தெரிவித்தார். இதைத்தவிர கோயமுத்தூர் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 1998 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பிலே 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அத்துடன் பலருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் ஏற்பட்டது. இதற்கு பின்னால் இவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில்  அரசு நஷ்டஈடும் அளித்திருந்தது. அப்படிப்பட்ட மிகப்பெரிய குற்றம். ஆகவே இதற்கு ஜாமீன் அளிப்பது சரியாக இருக்காது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதன் பின்னர் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,  இந்த வழக்கிலேயே எந்த விதமான பிணையும் அளிக்க முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது தொடர்பான வழக்கு பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும். அப்போது இது குறித்து நீங்கள் பேசலாம். இப்போது முன்கூட்டியே தனியாக இதற்கு பினையெல்லாம் கேட்பதற்கான எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என தெரிவித்து விட்டார்கள்.  25 வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை. குற்றத்தின் தன்மையை கருதி…. அதில் 58 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு பிணை போன்ற விஷயங்களை  பரிசிலிக்க முடியாது என நீதிபதி கவுல் தெரிவித்து இருக்கிறார்.