ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 3000 மேற்பட்ட ஜாதிகள் இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அடிப்படை வசதியில் வாழ்வாதாரம் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்.

எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு போல  நடத்துவது அவசியமானது என்றும்,  அவ்வாறு எடுக்கப்படும் பட்சத்தில் தான் அரசின் நலத்திட்டங்களும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் சமமாக சென்றடையும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசிடம் மனு கொடுத்திருப்பதாகவும்,  அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொதுநல வழக்காக தொடரப்பட்டிருந்ததால் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை விசாரித்தவுடன்,  எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது  என்பதால்?

அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கோரிக்கை மனுவை நிராகரித்தார். அதேசமயம் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதால் ? அந்த மனுவின்  மீது அரசிடமே அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள  அறிவுறுத்தி சட்ட பாதுகாப்பு இயக்கம் தொடங்க வழக்கினை  முழுமையாக முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.