நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் உடனுக்குடன் கடன்  வழங்கப்படுவதாக பெருமிதத்துடன் கூறினார் . அப்பொழுது திடீரென்று எழுந்த நபர் வங்கியில் கடன் எளிதாக கிடைக்கும்  என்று கூறினார்கள் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை என்று சத்தமாக கூறியதால் அந்த நிகழ்ச்சி சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய கேள்வியால் நிர்மலா சீதாராமனின் முகம் மாறியது.

அதன் பிறகு தேசிய நிர்மலா சீதாராமன், தனக்கு லோன் கிடைக்கலன்னு வேதனையுடன் சொல்லிட்டு இருக்காரு. அதை ரொம்ப ஆர்வமாக ஊடகங்களும் கவர் பண்ணிட்டு இருக்கீங்க. இப்போ அந்த நபரை நான் மேடைக்கு அழைக்கிறேன். வாங்க என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். தேவைப்பட்டால் நான் பேசி உடனே உங்களுக்கு லோன் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.

அப்போது மேலே ஏறிய அந்த நபர் எனக்கு எப்போ லோன் கிடைக்கும்னு சொல்லுங்க இல்லனா என்ன காரணத்துக்காக லோன் தர மாட்டீங்கன்னு சொல்லுங்க .அதைக் கேட்பதற்கு தான் இங்கே நான் வந்திருக்கிறேன் என்றார். அப்போது நிர்மலா சீதாராமன் சப்ஜெக்ட்ட எல்லோரும் முன்னாடியும் சொல்லிட்டீங்க அது தொடர்பாக பேப்பரை கொடுங்க நான் பேசுறேன் என்று கூறி அனுப்பி வைத்தார்.