நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது சொத்துக்களின் போட்டோ புவியியல் விவரங்களும் இடம் பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை அக். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுநாள் வரை சொத்துகளை பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் போட்டோ சேர்ப்பது இல்லை. காலி மனை என்று குறிப்பிடுவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த புதிய முறை அமலுக்கு வந்தது.