திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையங்காடு பகுதியில் அஸ்வின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு சென்றள்ளார். பின்னர் அஸ்வின் குமார் புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் லூர்துபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால் சுதாரித்துக் கொண்டு லேசான காயங்களுடன் இருந்த அஸ்வின் குமார் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.