அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்னைக்கு 2, 3 வருஷம் ஆச்சு…   தலைவர் நாடோடி மன்னன் படத்தில் சொல்லுவாரு. நாடோடியும்  எம்ஜிஆர் தான், மன்னனும் எம்ஜிஆர் தான் சொல்லுவாரு. இரண்டு பேரும் சந்திக்கிறார்கள். சந்திக்கும்போது சொல்றாரு..  மண்ணா எங்களை போன்ற ஏழைகளின் உடைய நிலை உங்களுக்கு தெரியாது…

நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறவர்கள்,  நாங்கள் மக்களோடு இருந்து மாளிகையை பார்ப்போம். எங்களுடைய உணர்வுகள் உங்களுக்கு புரியாது. உங்களுக்கு பல ஆடைகள் இருக்கும்..  எங்களுக்கு ஒரு ஆடை கூட இருக்காது. காலில் முள் குத்தினால் கூட புடுங்கி எறிந்து விட்டு போய்க்கிட்டு இருப்போம்.

எங்கள் பெண்கள் முறித்துவிட்டு  செல்வார்கள். இது எல்லாம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் பன்னீரிலும்,  பாலிலும் திளைக்கிறீர்கள் என்று சொல்வார்.  ஏழைகளின் உடைய நிலையை அன்றைக்கே சொல்லுவாரு. 1958 லே புரட்சித்தலைவர்.  வந்த உடனே நடைமுறைப்படுத்தினார் புரட்சித் தலைவர். அன்றைக்கு சைக்கிளில் இருவர் போகக்கூடாது.

இன்றைக்கு  டூவீலர்,  ஃபோர் வீலர் இதெல்லாம் நிறைய இருக்கு. அன்னைக்கு அப்படி எல்லாம் கிடையாது. வெறும் சைக்கிள் பாத்தீங்கன்னா…  சைக்கிள் சிம்னி விளக்கு வச்சிருப்பாங்க… தொங்கும்… இல்லன்னா டைனமோ இருக்கும்…  போலீஸ்காரர் பார்த்துவிட்டார் என்றால் கேஸ் போட்டுருவாரு. அதனால கணவன் மனைவி சினிமாவுக்கு போனா கூட இறங்கி போலீஸ்கார பார்த்தாங்கன்னா… நடந்து போகணும்.

காக்கி சட்டையை பார்த்தால்… இல்லைனா கேஸ்…. அதே மாதிரி லைட் எரியனும். நைட்டானா அது மேல தொட்டு பாப்பாங்க எரிஞ்சுதா, எரியலையான்னு…  டைனமோனா சுடுதா ? இல்லையா என்று பாப்பாங்க. இதை ரத்து பண்ணுனாரு எம்ஜிஆர். முதன் முதலில் ரத்து பண்ணாரு ஏழைப்படுகின்ற  துன்பத்தை எப்படி பார்க்கிறார் பாருங்கள் என தெரிவித்தார்.