திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தளபதி அவர்கள் நினைத்து நினைத்து இரவு பகல் சிந்தித்து சிந்தித்து இந்த மக்களுக்கு எது தேவையோ ?  அதை குறிப்பிட்டு காட்டி செய்வதில் வல்லவராக இருக்கிறார். நான் பார்த்தவறையில்…  நான் அண்ணாவோடு நெருங்கி பழகி இருக்கிறேன்.  தலைவரோடு 53 ஆண்டு காலம் அந்த இமயத்தின் மடியிலே நான் உட்கார்ந்து இருந்திருக்கிறேன். அவர்களுடைய பாணி வேறு….  தளபதியினுடைய பாணி வேறு…  இன்றைக்கு இந்த பாணி தான் செல்லுபடி ஆகிற பாணி.

எனவே இவர் போடுகிற அந்த பிடியை…  தளர்த்துவதற்கு எதிரிகள் திக்கு முக்காடி கொண்டிருக்கிறார்கள். குத்துச் சண்டையிலே பிடிபடுவானே,  அந்த பிடி போட்டு இருக்கிறார்.  மரண பிடி பயப்படுகிறார்கள் . ஆனால் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் இந்த கட்சிக்கு கிடைத்திருக்கிற ஏவுகணைகள். உங்களை இந்த  தேர்தலில் ஏவுகணைகளாக விடுகிறார். நான் கேட்கிறேன்…  நூறு பேரை நம்மால் சமாதானம் பண்ணி…  நம்மளால் வாக்கு சாவடிக்கு அழைத்து வர முடியாது. 100 பேர் தான்… காலையில ஒரு டைம்,  சாயங்காலம் ஒரு டைம் பார்த்தா…  அவனே ஓட்டு போடுறேன்,  போயா என்று சொல்லிருவான்.

ஆகையால் 100 பேரை 100 பேரை நீங்கள் சமாளித்தீர்களே ஆனால் ?  நாம் எந்த வெற்றியையும் ஈட்ட முடியும்.  40க்கு 40 பெற  முடியும். பாராளுமன்ற – சட்டமன்றத்தில் வெற்றி பெற முடியும். எந்த கொம்பனும் தளபதியை அசைத்து பார்க்க முடியாது.  ஆகையினால் ? நம் தலைவர் ஆணையிட்டு இருக்கிறார். நினைத்துக் கொள்ளுங்கள். பாம்பு காலை சுற்றுகிற போது கூட…  கடிக்குமே என்ற பயம் ஏற்படவில்லை. காரணம் அவன் திமுககாரன்.

அதேதான்.. அந்த தைரியம் என் தலைவர் தளபதி…  என் தலைவர் கலைஞருடைய மகன் ஆணையிட்டு இருக்கிறார். அந்த ஆணையை  நிறைவேற்றுகிற வகையில் நான் ஒரு சபதம் ஏற்பேன் என்று ஒவ்வொருவரும் ஒரு சபதம் ஏற்று கொண்டால் நம்மை வெல்வதற்கு எந்த கொம்பனும் அருகதை கிடையாது வெற்றி பெறுவோம்  தெரிவித்தார்.