
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எதிரே உள்ள மேசையில் 4 கல்லூரி மாணவர்கள் சாப்பிட வந்து அமர்ந்துள்ளனர். அப்போது அவர் எதற்காக என்னை முறைத்து பார்க்கிறீர்கள்? நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மரியாதையாக சென்று விடுங்கள் இல்லை என்றால் முகத்தை உடைத்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அவர் தனது பைக்கில் அங்கிருந்து புறப்பட்டார். இது குறித்து விசாரித்தபோது அந்த காவலர் கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுதியில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கல்லூரி மாணவர்களின் ஒருவரின் பெற்றோர் இது குறித்து காவல்துறையினர் புகார் அளித்தார். மது போதையில் கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறையினர் மிரட்டல் விருத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.