செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மது போதையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மது போதையில் இருந்த நாகராஜ் போலீசாரை ஒருமையில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாகராஜ் ஒரு காலில் கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதனால் போலீசார் நாகராஜை அடித்து துன்பத்தினார்களா என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நாகராஜ் காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவத்திற்கு அறப்போர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில், அரசாங்கம் நடத்தும் மதுபான கடையில் மது குடித்துவிட்டு வண்டி ஓட்டி போலீசாரிடம் பிடிபட்ட ஒருவர் அவர்களை அவதூறாக பேசினால் அந்த நபரின் காலை உடைக்கலாம் என எந்த சட்டம் கூறுகிறது. இதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் விளக்கம் அளிப்பார்களா.? மேலும் தமிழக காவல்துறைக்கு இதுவா பெருமை என்று பதிவிட்டுள்ளனர்.