கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரவிளை பகுதியில் கேபிள் ஆபரேட்டரான ஜோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பண்ணிக்கோடு ரேஷன் கடை அருகே ஜோணி சிக்னல் போட்டு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஜோணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.