செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மகளிர் உரிமை தொகையை தேர்தலுக்கு முன்னாடி திருநெல்வேலி அல்வா கொடுத்தார்கள். இப்போது தேர்தலுக்கு பின்னாடி ரசகுல்லா கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்,  வேறு என்ன இருக்கிறது. பொதுவாகவே அல்வா கொடுப்பது பார்த்தீர்கள் என்றால் ? திமுகவிற்கு கைவந்த கலை. தேர்தல் வாக்குறுதி பொறுத்தவரை என்ன சொன்னார்கள் ?  இரண்டு கோடி பேருக்கு நாங்கள் தருவோம் என்று சொன்னார்கள்.

அதாவது உணவு பங்கீடு அட்டை (ரேஷன் கார்ட் ) வைத்திருக்கின்ற அத்தனை குடும்பத்திற்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்கள். இப்ப அதுதான் நாங்கள் கேட்கிறோம். மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு  போங்கள்.அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தான. இந்த மாதிரி தகுதிகள் இருந்தால் தான் நாங்கள் கொடுப்போம். இந்த தகுதி இல்லாதவர்களுக்கு நாங்கள் கண்டிப்பாக கொடுக்கப்போவதில்லை என்று அப்பவே சொல்லி இருந்தால் ? மகளிர் தெளிவாக இருந்திருப்பார்கள்.

ஆயிரம் ரூபாய் என்று சொல்லிவிட்டு….  கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு….. அப்படியே ஓட்டு போட்டார்கள். ஓட்டு போட்ட உடனே அவர்களுக்கு இல்லை என்று சொன்னால் ? அது ஏமாற்றும் வேலை தானே…  சீட்டிங் தான் அது. பிராடு தான அது.  சீட்டிங் , பிராடு யாரு பண்ணுறா ? ஸ்டாலின் பண்ணிக் கொண்டிருக்கிறார். மோசடி, ஏமாற்று… இது இரண்டுமே அவர்களுக்கு  உரித்தது என தெரிவித்தார்.