மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து சில தகவல்களை பார்ப்போம். இந்த முறை 5.5% உள்நாட்டு வளர்ச்சி மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு  பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு உற்பத்தி துறையில் வளர்ச்சி, சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள், வேளாண் துறைகள், கீழ்த்தட்டு மக்களை முன்னேற்றும் திட்டங்கள், பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி, பசுமை மற்றும் தொழில்நுட்பம் போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக பட்ஜெட் அமையலாம். அதோடு மருந்து மற்றும் மருத்துவத்துறை சார்ந்த திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் கொண்டுவரப்படலாம். மேலும் சுகாதாரத் துறையிலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.