
பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்று அண்ணாமலை சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான்,நான் மன்சூர் அலிகான். என் மூதாதையர்கள் எவ்வளவு அசிங்கபடுத்தப்பட்டு… அவமானம் படுத்தப்பட்டார்கள் என எனக்கு தெரியாது. இருந்தாலும், நான் ஒரு தமிழனா இன்னைக்கு அரசியல்ல எல்லா தர்கத்துக்கும் பதில் சொல்லி, அதற்கான பலனை அனுபவச்சும் வருகின்றேன்.
தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கிறதுக்கும்…. நல்லதை நான் நாட்டுக்கு முன்னெடுத்து சொல்றதுக்கும் கடமை பட்டு இருக்கேன். அண்ணாமலை எல்லாமே தவறா சொல்லறாரு. பெரியார் என்கிற ஒரு சத்தியை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. அவர் அப்படி எடுத்தெறிஞ்ச வாக்குல சொல்றதுக்கு அவ்வளவு தகுதி உடையவரா ? ஏற்புடையதா ? என்பதை தமிழ்நாடு மக்கள் தான் தீர்மானிக்கனும்.
பெரியார் எல்லாம் அப்படி ஈஸியா வாய்க்கு வந்தபடி பேச முடியாது. உதயநிதி தம்பி சொன்னது…. ஆண்டாண்டு காலமாக 100 வருஷமாக அவர் சொன்ன ”சனாதனம்” இந்து மதத்தை எதிர்த்து சத்தியமா இல்லை என்று இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும் என தெரிவித்தார்.