செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, சகோதரி விஜயலட்சுமி அவர்கள் இந்த வழக்குக்காக நாம்  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னைக்கு பாத்தீங்கன்னா…  சகோதரி அவர்கள்  நள்ளிரவில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்… அவர்களுடைய சமூக வலைதளத்தில்… என்னன்னு பாத்தீங்கன்னா…  சீமான் அவர்கள் அவர்களால் சகோதரி விஜயலட்சுமி தற்கொலை செய்யக் கொள்வதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை காணொளியாக வெளியிட்டு இருக்காங்க.

அவர்கள்  சீமானால தற்கொலைக்கு உண்டானார்கள் என்றால் ?  அவங்க கர்நாடகா மாநிலம் பெங்களூர்ல இருந்து என்னை தொடர்பு கொண்டு தான் நியாயமும், நீதியும் தமிழகத்தில் யாரும் வாங்கி தருவதற்கு முன் வர மாட்டாங்க…  அதனால ஒரு பெண் தலைவராக  இருக்கக்கூடிய நீங்க வந்து… எனக்கு நியாயமும்,  நீதியும் பெற்றுக் கொடுக்கணும்னு என்கிட்ட கேட்டதன் பிரகாரத்தில் அவங்க சென்னை ராயப்பேட்டை தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தாங்க.

அந்த ஹோட்டலில் உரிமையாளரை  நாம் தமிழர் கட்சியினர்  அச்சுறுத்தி,  அவங்கள அந்த ஹோட்டலை விட்டு அப்புறப்படுத்தினாங்க  ஹோட்டல் நிர்வாகம் விஜயலட்சுமி அவர்களை ஹோட்டலில் இருந்து வெளியேறலன்னா நாங்க உங்ககிட்ட இருக்க சாமான் செட்டெல்லாம் தூக்கி வெளியில் வீசிடுவோம் என்றதால் ? என்கிட்ட உதவி கேட்டாங்க. அந்த உதவியின் பெயரில் செங்கல்பட்டில் இருக்கக்கூடிய என்னுடைய சிறிய தகப்பனார் வீட்டில் அவங்களுக்கு உணவு வாங்கி கொடுத்து,  உடுத்த உடை… இருக்க இடம் கொடுத்து அவங்க வாழ வழிவகை செஞ்சு கொடுத்தோம்.

ஆனால்  இன்னைக்கு அவங்க தற்கொலை செஞ்சுகிறேன்னு ஒரு வீடியோ வெளியிட்டதால அங்க இருக்கக்கூடிய… வயதான…. உடல்நிலை சரியில்லாத… என்னுடைய சிறிய தகப்பனாரும்… என்னுடைய சின்னம்மா அவர்களுக்கும் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படப்போகுது என்பதற்காக.. கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் மேடம் அவர்களை சந்தித்து ஒரு மனு  கொடுத்திருக்கிறோம்.

என்ன மனு கொடுத்திருக்கின்றோம் அப்படின்னா…   விஜயலட்சுமி அவர்களுடைய சகோதரி உஷாதேவி அவர்களும் உடல்நிலையால்  பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு மருத்துவ ரீதியான உதவி செய்வதற்காகவும்,  செங்கல்பட்டில் என்னுடைய சிறிய தகப்பனார்  பாதுகாப்பில் இருக்கக் கூடிய விஜயலட்சுமி அவர்களை காவல்துறை அவர்களது பாதுகாப்பில் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில்  வழக்கு விசாரணை முடியும் வரை வைத்துக் கொள்ளுமாறு நாங்கள் மனு கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.