வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்கள் பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் நிலையத்துக்கு நான் தான் விரும்பி வந்தேன். ஏன்னா நான் நாளைக்கு நான் நீதிமன்றத்துக்கு போகும் போது,  அரசு தரப்பில் என்ன பதில் சொல்றீங்கன்னு கேட்கும்போது ? அவரை இரண்டு தடவை அழைப்பாணை அனுப்புனோம்.. அவரு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. அதுக்கு நானே வந்தேன்.

வேற எதும் விளக்கம் வேணும் என்றாலும் ? மறுபடியும் சொல்லுறேன்னு சொல்லி இருக்கேன். இந்த மாதிரி சந்தேகங்களுக்கு, எல்லாரையும் உட்கார வையுங்க பேசுங்க. உங்களுக்கு நேரம் முக்கியமில்லாம இருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம். வழக்கு 20ஆம் தேதி வருகிறது. அங்க நாங்க வழக்கை அழிப்பதற்கான  மனு போட்டு இருக்கோம்.

அதுல இப்போ இவுங்க வித்ட்ரா பண்ணதையும் சேர்ப்போம். பிறகு  என்ன வருதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணுவோம். நான் 18ஆம் தேதி வாரேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்க வந்து திரும்ப பெற்றார்கள். இதுக்கெல்லாம் நான் பயப்படற ஆளு கிடையாது.  நான் 18ஆம் தேதி வாரேன் அப்படின்னு கையெழுத்து போட்டு அந்த அழைப்பானை வாங்கும்போது கொடுத்து இருந்தேன்.

அதனால வரேன்… அதுக்கு பின்னாடி தான் அவங்க வழக்கை திரும்ப பெறுகிறார்கள். ஒரு நாள் காலையில ஒரு நேர்கால் கொடுக்கிறேன்….  ஊடகங்களுக்கு பதில் சொல்றேன்.  மாலையில் கலங்குது. என்ன நினைத்துவிட்டீர்கள் என்றால் ? புகார் கொடுத்தால் அவர் அமைதி ஆயிருவாரு. அப்படியே கைய கட்டி ஓரத்தில் போய் படுத்துடுவார் என்று நினைத்தீர்கள். புலி பதுங்குறது,  பாயாத்தானே ஒழிய.. அப்படி  பதுங்கிட்டே கிடப்பதற்கு கிடையாது அல்லவா ?

அயோக்கிய பயலுக… ஊரை அடிச்சு உலையில போடுறவன்…. பல்லாயிரக்கணக்கான பெண்களை கெடுத்து வன்கொடுமை செய்றவன் எல்லாம் நல்லவனாக நாட்டை ஆண்டு சுத்திட்டு இருக்கும்போது…. அநீதியை எதிர்த்து போராடிட்டு இருக்கிற நான் ஏன் அச்சப்படணும்.  நான் ஏன் பயப்படனும். புதுசா வா ? ஜெயில் கட்டினது எங்களுக்காக என  நினைக்கிற பரம்பரை நாங்க. இவன் பூராம் சட்டம் படிச்சது எங்களுக்கு வழக்கு பார்க்க தான். இல்லன்னா…  அவன் பட்டினியா கிடந்தது செத்து போயிருவேன்.  எல்லாருமே காந்தி ஆயிட்டா எப்படி ?  காவல் நிலையங்கள் எல்லாம் நூலகமா மாறிடும் இல்ல என தெரிவித்தார்.