திருச்சியை வைகோ உடைய மகன் துரை வையாபுரிக்கு கொடுப்பதற்கு திமுக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே துரை வைகோ அவர்கள்  துவங்கியுள்ளதாகவும் தெரிகிறது. வரக்கூடிய நான்காம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக  திமுக தொகுதி பங்கிட்டு குழு டி.ஆர் பாலு தலைமையிலான குழுவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், இருந்தாலும் கூட இந்த உடன்பாடு ஏற்பதாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2019 எம்பி தேர்தலின் போது ஈரோடு கணேசமூர்த்திக்கு மதிமுக சார்பாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் உதயசூரியன் சின்னத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்தார்.  ஈரோடு   தற்போது மதிமுகாவுக்கு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக திருச்சி நாடாளுமன்றத்தை கொடுக்கிறார்கள்.

திருச்சி கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை திருச்சியை துரை வைகோவுக்கு கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் அடுத்த  முதலமைச்சர் தமிழகம் திரும்பியதுடன் இருக்கும் என தெரிகிறது.

திருச்சியை ஏன் ஒதுக்கி உள்ளார்கள் என்றால்,  வைகோ  ஏற்கனவே தனியாக கட்சி சென்றபோது செல்வாக்குள்ள பகுதியாக திருச்சி இருந்தது. தென் மாவட்டங்களில்  தொடக்கமாக இருக்கக்கூடிய திருச்சி வெற்றிக்கு  நன்றாக இருக்கும். மதிமுகவுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்று தான் அங்கு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.\

திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கே.என் நேரு  ஆகியோர் திருச்சியில் பொறுப்பு அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.  அதே போல  வைகோவுக்கு இந்த முறையும் ராஜசபா சீட் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது.