இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் உள்ள ஏழு மாடி கொண்ட பழமையான ஹோட்டல் கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென தொடங்கிய தீ மளமளவென பரவி மொத்த கட்டிடத்தையும் தன்வசப்படுத்தியது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🔥 DEADLY FIRE in Jakarta:
A massive fire tore through a 7-storey office building in central #Jakarta, killing 17 people and trapping several others.
Rescue teams are still searching the site as the cause remains under investigation.#Indonesia #H2HseriesEP7 #Ember pic.twitter.com/J2J6Hnkubb
— Eyes on the Globe (@eyes_globe) December 9, 2025
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், பழமையான மின் கம்பிகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறிய கட்டுமானம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் ஜகர்தா நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
