2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழலில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகத் தனது கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் எண்ணிக்கையை உயர்த்த அறிவுறுத்தியுள்ளார். இது கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை, த.வெ.க-வில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நிர்வாகி என்ற அளவிலேயே நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தேர்தல் பணிகளை மிகவும் வேகமாகவும், திறமையாகவும் மேற்கொள்ளும் பொருட்டு, த.வெ.க தலைவர் விஜய் ஒரு வாக்குச்சாவடிக்கு 10 முதல் 20 நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியின் இந்தத் திடீர் முடிவு, த.வெ.க 2026 தேர்தலை எவ்வளவு தீவிரத்துடன் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என்பதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
