சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், காதலர் தினமான இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 3120 ரூபாய் வரை குறைந்திருந்த தங்கம், இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 14,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 1280 ரூபாய் உயர்ந்து, 1,16,480 ரூபாயை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் தங்கம் விலை குறைந்து வந்ததால் மகிழ்ச்சியில் இருந்த நகைப் பிரியர்கள், இன்றைய திடீர் விலை உயர்வால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சூழலால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
