சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் ஆனது உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை தனது 22ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இரத்த பரிசோதனை எக்கோ, வயிற்று ஸ்கேன்,  GAG சோதனை,  கழுத்து வலி, முதுகு வலி, முதுகு எலும்பு, வயிற்று வலிக்கான சோதனை,  MRCB,  மூளைக்கான MRI MRE MREA உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  மூளைக்கான எம்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் பிரச்சனை இருப்பதுக்காக கண்டறியப்பட்டதாகவும், மேலும் முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது.

முதுகெலும்பில் வீக்கம் காணப்படுவதாகவும் அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல எம் ஆர் சி சோதனைகள் பல பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது நாளடைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும். அதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பல்வேறு உபாதைகளால் செந்தில் பாலாஜி அவதிப்பட்டு வருவதாகவும்,  தொடர்ந்து சிறைவாசத்தில் உள்ளதால் உரிய சிகிச்சை எடுக்காமல் மனுதாரர் செந்தில் பாலாஜி உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலை கருத்தில் கொண்டு அவருடைய உரிய சிகிச்சைக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜினுடைய மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சில  பிரச்சினைகள் கண்டறியப்பட்டதாகவும்,  அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவருக்கு ப்ரைன் ஸ்ட்ரோக் உட்பட்டு,   அவர் நாளடைவில் கோமாநிலைக்கு செல்ல நேரிடும் என்றும்,  இதே போல இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் உரிய அளிக்கவில்லை என்றால் இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு நாளடைவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால்,  அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.  உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும்,  அதனை முறையாக செய்யவில்லை என்றால் மூச்சுத் திணறல், மும்முனியா  பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு,  கணைய அலர்ஜி, ரத்த கசிவு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே செந்தில் பாலாஜி என்னுடைய உடல் நிலைக்கு உரிய சிகிச்சை எடுக்கும் வகையில் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவானது 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது