தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு முன்கூட்டியே தேர்தல் வரும் நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜக தலைமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச முற்பட்டது.
அந்தக் கட்சியின் தலைவர்கள் இரண்டு மணி நேரமாக காத்திருந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை பாஜக தங்கள் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டுவதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் வரும் என எண்ணி முதல்வர் ரங்கசாமி அதனை மறுத்துள்ளார். இதன் காரணமாக நேற்று அவர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் கிளம்பிய நிலையில் தனியாக போட்டியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட தகவல் கூறப்படும் நிலையில் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் ராஜ் பவன், நெல்லி தோப்பு, மண்ணாடிபட்டு, திருபுவனை, மங்கலம், கதர்காமம் ஆகிய ஆறு தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே போட்டியிட விருப்பம் காட்டுகிறது.
20-ல் காங்கிரசும், 15-ல் திமுகவும் மனுதாக்கல் செய்ய உள்ளனர். ஆனால் தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படாததால் தற்போது இரு தரப்பும் வேட்பு மனுதாக்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் இன்று டெல்லிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
