சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.

லால் சலாம் பட விழாவில் ரஜினிகாந்தின் மக்கள் ஐஸ்வர்யா பேசும்போது எனது தந்தையை சங்கி என்று யாரேனும் சொல்லும் போதெல்லாம் எனக்கு கோபம் வரும் என்று குறிப்பிட்டு சொல்லி இருந்தார். சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்திருக்க  மாட்டார் என்று ஐஸ்வர்யா பேசியிருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அது குறித்த விளக்கம் ஒன்றை அளித்து இருக்கின்றார். எனது மகள் சொன்னது சரியே. அதே சமயம் சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என்ற விளக்கத்தையும் நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கிறார்