திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான ஐந்தே மாதங்களில் பி.எட் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் மற்றும் கணவரின் காதலியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அதாவது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற பி.எட் மாணவிக்கும், ராஜேஷ் (30) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாகப் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.
இந்தக் கொலை தொடர்பாகக் கௌசல்யாவின் கணவர் ராஜேஷ் மற்றும் அவரது காதலி தீபிகா (21) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜேஷுக்கும் தீபிகாவுக்கும் இடையே இருந்த திருமணத்திற்கு மீறிய உறவுக்குக் கௌசல்யா இடையூறாக இருந்ததால், இருவரும் இணைந்து அவரைக் கொலை செய்ததாகப் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது.
