அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று நண்பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு டிராகன் விண்கலம் மாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டது.

இந்தியா சார்பில் சுபான்ஷூ உள்ளிட்ட நான்கு வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் 14 நாட்கள் தங்கி 30 நாடுகளுக்கு சொந்தமான 60 சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் சுபான்ஷூ ஏழு சோதனைகளை மேற்கொள்வார். அதில் பச்சை பயிர், வெந்தய விதைகள் வளர்ப்பு, பாசிகள் மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி, தசை மீள் உருவாக்கம், மனித உடலியல்,மனித கணினி தொடர்பு ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் தற்போது டிராகன் விண்கலம் கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கிய விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்க அருகேயே நிறுத்தப்பட்டிருந்த படகு.

இன்னும் சில நொடிகளில் சுபான்ஷூ உள்ளிட்ட வீரர்கள் விண்கலத்தை விட்டு வெளியேற உள்ளனர். வீரர்களை விண்கலத்தில் இருந்து மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் மேற்கொள்கின்றனர்.