நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஒரு பெரிய அளவிலான விண்கல் ஏலத்திற்கு வருகிறது. அதாவது பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டத்தில் மிகப்பெரிய விண்கல் ஆகும். இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் கடந்த 2023 ஆம் ஆண்டு நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த அரியவகை விண்கல் 24.67 கிலோ எடையும், 15 அங்குல அகலமும் கொண்டுள்ளது. இந்த செவ்வாய் கிரக விண்கல் 2 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.33.4 கோடி வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரக மேற்பரப்பில் இந்த விண்கல் சிறு கோளுடன் மோதி வெடித்து சிதறி 140 மில்லியன் மைல்கள் கடந்து பூமியில் விழுந்து உள்ளதாக அறிவியல் இயற்கை வரலாற்றுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நாளை இந்த விண்கல் ஏலம் நடைபெற உள்ளது.