அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கே சி பழனிச்சாமியின் மகன் சுரேன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
