ஐஐடி குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராடிய 138 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முறை ஐஐடி குழுவினர் ஆய்வுக்கு வரவுள்ளதாக அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தார்கள். இதனால் அந்தப் போராட்ட குழுவினர் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்து,  சாலை மறியல் போராட்டமானது நேற்று காலை நடைபெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மீது  வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக ஒரு பிரிவும்,  அரசு அதிகாரிகள் சொல்லி மதிக்காத பிரிவு என  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 433 வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல்முறையாக 138 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.