தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஊதியம் ரூ.294 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது