தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியுடன் இணைந்து பயணித்தோம். இந்த முறை நாங்கள் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்ட நிலையில் 10 அம்சம் முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினோம்.

ஆனால் திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு சீட் மட்டுமே தருவதாக கூறினார்கள். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தன்னுடைய 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் புதிய கூட்டணியில் இணைய வேல்முருகன் முடிவு செய்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.