அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரபரப்பான மேம்பாலம் ஒன்றின் நடுவே, பிரபல தொழிலதிபர் பவுரா என்பவரின் மனைவி ஹரபி, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரபி, தனது தோழிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மேம்பாலத்தின் நடுவே சொகுசு கார்களை வரிசையாக நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலானது.

Businessman Gautam Baruah landed in trouble while celebrating his wife’s birthday. Baruah was detained by Bharalumukh Police for allegedly organizing a birthday celebration on the Kumar Bhaskar Varma Bridge, where a red carpet was laid out. Police action was taken after… pic.twitter.com/1oZH0gbSQ7

— atanu bhuyan (@atanubhuyan) June 23, 2026

பொதுஇடத்தில் அத்துமீறி நடத்தப்பட்ட இந்த கொண்டாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட கவுகாத்தி லதாசில் காவல் நிலைய போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழிலதிபர் பவுரா, நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய அவரது மனைவி ஹரபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் என மொத்தம் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.