1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது; இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.