பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதாகப் பரவிய தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

அதாவது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் மற்றும் கடல்சார் சிக்கல்களுக்கு மத்தியில், முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் தடையின்றிச் செல்ல ஈரான் அனுமதி வழங்கிவிட்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்ல இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததாகப் பரவும் செய்திகள் உண்மையில்லை. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னதாக இந்தியாவுக்கு மட்டும் அனுமதி கொடுத்ததாக வந்த செய்திகளை ஈரான் மறுத்த நிலையில் தற்போது இந்தியாவும் அடுத்துள்ளது. அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய 1.35 லட்சம் மெட்ரிக் டன் அடங்கிய எண்ணையை சுமந்து வந்த கப்பல் ஒன்று ஈரான் தாக்குதலில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.