தமிழக அரசியலில் நிலவி வந்த ஒருவார கால பரபரப்புக்கு இன்று சட்டப்பேரவையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது பெரும்பான்மையை நிரூபித்து மிகப்பபெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வின் ஒரு தரப்பு உள்ளிட்ட 22 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்த நிலையில், 144 என்ற இமாலய பலத்துடன் விஜய் அரசு தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் தவெக-வின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது.
