தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
“முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது; அவை அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அவையில் தெரிவித்தார். குறிப்பாக, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றது போல, நல்ல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றித் தவெக அரசு முன்னெடுத்துச் செல்லும் என்ற விஜய்யின் இந்த அறிவிப்பு, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி ஆதரவு கட்சிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
