புதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான விராலிமலையில் நடைபெற்ற அனல் பறக்கும் போட்டியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீண்டும் ஒருமுறை தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த அவர், ஒவ்வொரு சுற்றிலும் தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு இறுதி வெற்றியை உறுதி செய்தார்.

2011 முதல் தொடர்ந்து நான்கு முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று, விராலிமலையின் அசைக்க முடியாத நாயகன் என்பதை விஜயபாஸ்கர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

கடும் தேர்தல் களம், ஆளும் கட்சியின் வியூகங்கள் என அனைத்தையும் கடந்து அவர் பெற்றுள்ள இந்த வெற்றி, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விராலிமலை தொகுதி முழுவதும் அதிமுகவினர் இரட்டை இலை கோஷங்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.