தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படும் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தவெகவுக்கு ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்து திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகக் கூறி விஜய்க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதேபோல், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், இதுவரை விஜய்க்கு ஆதரவு அளிக்காமல் திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதனால் தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதோடு, திருமாவளவனின் இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.