தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு – இது திருமா காலம்! இனி உயர்வோம் மேலும் மேலும்!” என அவர் பதிவிட்டுள்ளார். ஆட்சி அமைக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசிக ஆதரவு அளிக்குமா அல்லது திமுக கூட்டணியிலேயே நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்து வரும் சூழலில், ‘அதிகாரப் பகிர்வு’ என்ற ஒற்றை வார்த்தையை வன்னி அரசு முன்வைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
யாருக்கு ஆதரவு அளித்தாலும் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற விசிகவின் நீண்ட கால கோரிக்கையை இந்தத் தருணத்தில் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
