தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு கடிதங்களை வழங்கி வரும் சூழலில், ஐயுஎம்எல் கட்சி தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், “நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிப்போம், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை” என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தவெகவுக்கு 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில், ஐயுஎம்எல் கட்சியின் இந்தத் திடீர் அறிவிப்பு விஜய் தரப்புக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதனால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் அடுத்தகட்டமாக விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.
