2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் சூழல் கடுமையாக மாறி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணையும் வகையில் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“திமுகவுக்கு எதிராக இருக்க வேண்டும் என நம்பினால், விஜய் தனித்துப் போட்டியிடும் மனப்பான்மையை தவிர்த்து, அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “விஜய் தனித்து தேர்தலில் போட்டியிட்டால், திமுக அவரை அழித்துவிடும். அதிமுகவின் பலம், கட்டமைப்பு, அனுபவம் ஆகியவை விஜய்க்கு துணையாக தேவை. கூட்டணியில் சேர்ந்தால் தான் அவர் பாஸ் மார்க் எடுக்க முடியும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம், எதிர்க்கட்சியாக திகழும் அதிமுக, விஜய்க்கு வலுவூட்டும் முயற்சியில் இருப்பது தெளிவாகியுள்ளது. இவரது இந்த கூற்றுகள், எதிர்வரும் நாட்களில் அதிமுக–தவெக உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை தரக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.