நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரப்புரை செய்தார். மாநிலத்தில் திமுக அரசு தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், “நாங்கள் மக்களிடம் எதையும் மறைக்கவில்லை.

எங்களுடைய செயல்களும், நெறிகளும் நேர்மையையும் தொண்டர்மனப்பான்மையையும் அடிப்படையாகக் கொண்டவை” என்றார். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா. நவாஷ், “விஜய் பொய் பேசுகிறார்” என கூறியிருந்ததற்கு பதிலளித்த விஜய், “மக்களிடையே எங்களுக்குப் பெருகி வரும் ஆதரவை கண்டு, சிலர் அஞ்சி நடுங்குகிறார்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

“>

 

மேலும் விஜய் கூறியதாவது, “1967 மற்றும் 1977 தேர்தல்களில் அரசியலுக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்திய வரலாறு உண்டு. அந்த வரலாற்றை மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டுவோம். புதியதோர் உலகை மக்கள் நம்பிக்கையுடன் உருவாக்குவோம். வெற்றி நிச்சயம்” என உறுதிமொழி அளித்தார்.

விஜயின் இந்த பேச்சு, கட்சியின் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தையும் எதிரணிகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விஜயின் பிரசார அலை மாவட்டங்களில் பரவலாகத் தொடர்ந்து வருகிறது.