பட்டாளி மக்கள்கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கட்சி அமைப்புகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் முக்கிய நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது புதிய ஒரு முக்கிய பதவியிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன்படி, பாமக கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அருளை நியமித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “புதிய செய்தித் தொடர்பாளர் அருளுக்கு, அனைத்து நிலை நிர்வாகிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாமகவில் தொடரும் இந்த நிர்வாக மாற்றங்கள், அக்கட்சியின் எதிர்கால அமைப்பு மற்றும் இயக்கதுறையில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் வகையில் அமையலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
