குறைந்த கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடருமென RBI கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற கடன்களின் வட்டி உயராது என அறியமுடிகிறது. பொருளாதார மந்த நிலையில் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் அவதியுற்றுவரும் ஏழை எளிய நடுத்தர மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.