சீன நாட்டைச் சேர்ந்த லெனோவா (Lenova) நிறுவனம் லேப்டாப் மற்றும் டேப்லெட் ஆகிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மும்பை, பெங்களூரு, குர்கான் நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புகார்களின் அடிப்படையில் லெனோவா நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்