2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, மக்கள் தான் எங்கள் எஜமானார். மக்கள் நலனை முன்வைத்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார்.