தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்திரன். இவர் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். இவர்களது திருமணம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு தற்போது மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதாவது ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி 5.24 கோடி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரில் கைதான ரோகன் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். மேலும் அதன் அடிப்படையில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
