தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல்,  தனியார் பயிற்சி மையங்களின் உதவியுடன் படித்து வரும் தனித் தேர்வர்களுக்காக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 17) நிறைவடைகிறது. எனவே, தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தனித் தேர்வர்கள், தேர்வுத்துறை இணையதளமான *www.dge.tn.gov.in*-இல் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களை நேரில் அணுகி ரூ.195 கட்டணத்துடன் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த கால அவகாசத்தை தவறவிட்டவர்களுக்கு, தட்கல் முறையில் ஜூலை 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தேர்வு தகவல்களுக்கான மேலும் விரிவான விபரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.