கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வாகா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதாவது துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.5 கிலோ  தங்கம் கடத்தி வந்த நிலையில் ஏர்போர்ட்டில் வைத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பலமுறை இதே போன்று துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவருடைய வீட்டிலிருந்து ஏராளமான தங்கம் மற்றும் பணம் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் அவர் செய்த குற்றம் நிருபனமானதால் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.