மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கியது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விழுந்து நெருங்கிய விமானமும் விமானப்படைக்கு சொந்தமானது என இராணுவம் தகவல் தெரிவித்தது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் 2 போர் விமானங்களும், ராஜஸ்தானில் விமானப்படை விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் 3 விமானிகளில் 2 பேர் உயிர் தப்பியதாக தகவல் வெளியானது. இதில்  ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்  காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் குவாலியர் அருகே இன்று காலை விபத்தில் சிக்கியது. விமானம் வழக்கமான செயல்பாட்டு பறக்கும் பயிற்சி பணியில் இருந்தது. இதில் மூன்று விமானிகளில் ஒருவர்  மரணமடைந்தார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்கு புறப்பட்டபோது இரு விமானங்களும் மோதிக்கொண்டன. பயிற்சியின் போது மிக அதிக வேகத்தில் இரு விமானங்களும் பறந்த போது மோதி இருக்கலாம் என விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது..