இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ஜோத் சாவ்னி என்பவர் யுனிவர்சிட்டி ஆப் லண்டன் ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியர் பட்டம் பெற்றவர். ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியரிங் படித்திருந்தாலும் அந்த துறையில் மட்டும் அவர் வேலை செய்யவில்லை. அதற்கு மாறாக வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டைசனில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு கிடைத்த வேலை வசதியானவர்கள் பயன்படுத்தும் நவீன வேக்குவம் கிளீனர் இயந்திரத்தை உருவாக்குவதாகும். தன்னுடைய படிப்பு சாதாரண ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற காரணத்தினால் அவர் இந்த வேலையை முழு மனதுடன் செய்ய விரும்பவில்லை.

அதனால் அந்த வேலையை விட்டு விலகி உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள இன்ஜினியர்ஸ் வித்அவுட் பார்டர் என்ற நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். சாதாரண மக்கள் பயன்படுத்தும் அடுப்பின் எரிபொருள் செலவு பாதியாக குறைக்க வேண்டும் என்ற விதமாக ஒரு அடுப்பை தயாரித்துள்ளார். இதனை தொடர்ந்து கைகளாலே துணி துவைக்கும் போது அதிக தண்ணீர் செலவாகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் மின்சாரம் இல்லாமல் கையால் இயங்கும் வாஷிங்மெஷினை கண்டுபிடிக்க அவர் முயற்சி செய்துள்ளார். அந்த வகையில் மின்சாரம் இல்லாத இடத்திலும் பயன்படுத்தக்கூடிய இந்த வாஷிங்மெஷின் கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாய்ண்ட்ஸ் ஆப் லைட் விருதை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் இயங்கும் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இதை வாங்கியுள்ளனர்.